பாலா’வின் பேச்சு எப்பவும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஓசூர் போகும்
போதெல்லாம் எப்படியும் சந்தித்து விடுவது வழக்கம். இன்றைய ஸூம் கூட்டத்தில்
பேசிக்கொண்டிருந்தார். கூட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மணீக்கூறு கழிந்தே
நான் இணைந்தேன். மறந்தே விட்டது, ஒரு மலையாளப் படம் (வலிய பெருந்நாள்)
ஓடிக்கொண்டிருந்தது ( இத்தனைக்கும் பாலா வாட்ஸாப்பில் ஸூம் கூட்டச்
சுட்டியை பகிர்ந்திருந்தார் எனக்கு.) அதில் லயித்தவன் இதை மறந்து
போய்.ஹிஹி.. செர்லாண்டிஸ் எழுதிய டான் க்விக்ஸாட் முதல் புதினம், முதல் போஸ்ட் மார்டனிக், முதல் கட்டுடைப்பு என அனைத்தும் புதிய விஷயங்கள்.(எனக்கு
) நமது அத்தனை சினிமாக்களிலும் சிக்கல் நேரத்தில் மிகச்சரியாகத் தோன்றும்
தலைவனை அறிமுகப் படுத்தியது செர்லாண்டிஸ் தானாம். இத்தனை நாள் எம்ஜியார்
தான் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். பின்னரும் தொடர்ந்து பேசினார்.
பேச்சு கிட்டத்தட்ட முடிந்துவிடும் நிலையில் இணைந்ததால் அதிகம் கேட்க
இயலவில்லை. கூட்டக்கோப்புச் சேமிப்பின் இணைப்புக்காக காத்திருக்க வேண்டியது
தான். எனினும் பின்னர் நிகழ்ந்த கேள்வி பதில் அருமை. அதிலும் ராஜேஸ்வரி
என்ற அம்மையார் ஈழத்தமிழில் பல வரலாற்று உண்மைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.
( அந்தக் காலங்களில் பெண்கள் கொஞ்சம் அறிவுள்ளவாராக இருப்பின்
சூனியக்காரி என்று தீ வைத்துக் கொளுத்தி விடுவர் எனவே அக்காலத்திய
புதினங்கள் பெண்களைப் பற்றி அதிகம் பேசாது இருக்கும்) ,குணா கந்தசாமி, கனலி
விக்னேஷ், வேல் கண்ணன் போன்ற பெருந்தகைகள் எல்லாம் கூடியிருக்கும்
இடத்தில் இந்தச்சின்னப்பயல் என்ன பெரிதாகக் கேட்டுவிட முடியும் என்று
மிண்டாதிருந்து விட்டேன்
அடுத்த கூட்டம் ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களைக் குறித்து என
ஒருங்கிணைப்பாளர் இளங்கோ சொன்னார். அந்தக்கூட்டத்துக்காவது நேரத்தில்
இணைவேன். அன்றும் எதேனும் மலயாளப்படம் பார்க்க வில்லை எனில். ...ஹிஹி
#டான்க்விக்ஸாட்
No comments:
Post a Comment