அந்தந்தக் காலக்கட்டத்தில் அவரவர் திறமைகளுக் கேற்ப , சக படைப்பாளிகளின் படைப்புகளை ஒப்பு நோக்கி, திறனறிந்து கொடுக்கப்பட்ட விருதுகள் தான் அவை. தகுதியுள்ளவர்க்கு மட்டுமே கொடுக்கப் பட்டிருக்க வேண்டும். அதையும் அந்தந்தக்காலத்தில் மனமுவந்து ஏற்றுக்கொண்ட படைப்பாளிகள் , இப்போது அந்த நிறுவனம், கடும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கிக்கொண்டு இருக்கும்போது எடுக்கும் சில தவிர்க்க இயலாத முடிவுகளை கருத்தில் கொண்டு தமக்கே அளித்த விருதுகளை திரும்பக் கொடுத்தல் என்பதை எங்கனம் நியாயப் படுத்த இயலும் எனத் தெரியவில்லை. இது எனது கருத்து மட்டுமே.
அறுவை சிகிச்சை செய்து மட்டுமே நீக்கவியலும் சில உடல் உபாதைகளை உடனேயே
இருக்கட்டும் என்பதை எந்த மருத்துவரும் ஒத்துக்கொள்ள மாட்டார். நிறுவனம்
என்பது சில நேரங்களில் சில கடுமையான முடிவுகளை எடுத்தே ஆக வேண்டிய
கட்டாயத்தில் இருக்கக்கூடும் முன்னர் எடுத்த தவறான முடிவுகளால். எத்தனையோ
பேரை வெளி உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நிறுவனம் அது.
வேலையிழந்தவர்கள் அதை மட்டுமே நம்பிக்கொண்டு இருந்தது என்பது பத்திரிக்கை
துறையைப் பொருத்தவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் அவர்கள்
யாரும் NonTechnical/ Unskilled Labourers இல்லை. படைப்பூக்கமும், சொந்தமாக
சிந்தித்து பல விஷயங்களை பாமரர்களுக்கும் எடுத்துச்செல்லும் படைப்பாளிகள்
தான்.
ஃப்ரீலேன்ஸிங் என்ற கருத்தாக்கம் இந்தத்துறைக்கு மட்டுமே சாலப்பொருந்தக்கூடிய ஒன்று. நிறுவனம் எடுக்கும் எந்த முடிவுகளையும் சமாளிக்கும் திறனில்லாத தொழிலாளர்கள் என்பதை நிர்வாகத்தின் பிழையாகக் கருதத் தோணவில்லை எனக்கு. எனது தகவல் தொழில்நுட்ப துறையில் இதெல்லாம் சர்வ சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்று. (Hire and Fire) புதிதாக திறன்களை வளர்த்துக் கொள்தல், நிறுவனம் சாராது சில வேலைகளை தாமாக தனியாக எடுத்து செய்ய முற்படுதல் என்பது மட்டுமே தொடர்ந்தும் தம்மை இயங்க வைக்கும். மேலும் அந்த நிறுவனங்கள் ஏதும் அரசாங்கம் நடத்துபவன அல்ல. வேலைப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லாத நிலை. போட்டிகள் மிகுந்தவை. தாமாக பல திறமைகளை வளர்த்துக்கொள்வதே இந்த சிக்கலான காலகட்டதுக்கு தேவையான ஒன்று. #விகடன்விருதுகள்
.

No comments:
Post a Comment