Sunday, April 19, 2020

ஸ்ருதி தென்பாண்டிச்சீமை



ஸ்ருதி பாடின ‘தென்பாண்டி சீமையில’ கேட்டேன். அவர் வெர்ஷன் அது. வெஸ்டர்ன் பாணியில கொஞ்சம் ஆப்ரா டைப் பாடலாக பாட முயற்சித்திருக்கிறார். என்ன பிரச்னைன்னா அந்தப் பாடலும் ராசைய்யாவும் கமலும் அந்தக் காட்சிகளுமாக கால காலமாக ஊறிப்போய்க் கிடக்கிறது நம்முள். இது போல சூழலுக்கோ இல்லை நமது கலாச்சாரப் பின்புலத்துக்கோ சரி வராத வெர்ஷனாக அவர் பாடினது தான் பிழையாகப் போய்விட்டது. 

இதையே திருவாசகத்தை ராசைய்யா மேல் நாட்டின் செவ்வியல் இசையான சிம்ஃபனி வடிவில் கொடுத்த போது ஏற்றுக்கொள்ள முடிந்தது. ராமானந்த ஸ்ரீனிவாச ஐயங்கார் அருளிச்செய்த மோகன ராகத்தில் அமைந்த ’நின்னுக்கோரி வர்ண’த்தை ராசைய்யா வெஸ்ட்டர்னில் ’அக்னி நட்சத்திரத்துக்காக’ இட்டபோது ரசித்தோம். ரஹ்மானும் ’கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா’ என்ற வெங்கடேச சுப்ரபாதத்தை மே மாதம் திரைப்படத்திற்கென ‘மார்கழிப்பூவே’ என்று கொடுத்த போதும் நம்மால் ரசிக்க முடிந்தது. இதெல்லாம் அவர்களின் வெர்ஷன்!

இருப்பினும் ஸ்ருதியின் இந்த வெஸ்ட்டர்ன் பாணியை நம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ராகத்தையோ வரிகளையோ மாற்றாது பாடினும்.இதே போல கொஞ்ச நாள் முன்னால சுசீலா ராமன் பாடின ‘பால் மணக்குது பழம் மணக்குது’ என்ற பக்திப்பாடலையும் வெஸ்ட்டர்ன் பாணியில் பாடினதை நம்மால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. கேட்டு கேட்டு ஊறித் திளைத்த ராகம் கலாச்சாரப் பின்னணி கொண்டதை கட்டுடைப்பு செய்து வேறுருவில் கொடுக்கும் போது அதிர்ச்சி மிஞ்சி கேலியுடன் புறந்தள்ள வைக்கிறது. 

எல்லாக்கட்டுடைப்புகளும் அவ்வக்காலத்தில் நடக்கத்தான் செய்யும். சில நாஸ்ட்டால்ஜியாக்களை சீண்டுதலை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. சிலது போற்றப்படும் சிலது தூற்றப்படும். #ஸ்ருதிதென்பாண்டிச்சீமை

.

No comments:

Post a Comment