இந்த
கெளதம் மேனன்லாம் ஏன் நடிக்கிறார்? எதாச்சும் பணமுடையா?. இவர் சொல்லிக்கொடுத்து
தான் இத்தனை நடிகர்களும் நடித்தார்கள் , எஸ்பெஷலி சிம்பு, என்று நம்புவது அத்தனை
கடினமாக இருக்கிறது எனக்கு. ஒரு வில்லனுக்குரிய உடல் மொழி இல்லை. வசன உச்சரிப்பு
திகிலூட்டுவதாக அமையவில்லை. எதோ நானும் ஸ்க்ரீன்ல நிக்கிறேன்ங்ற மாதிரி பேசறார்.
நடக்கிறார். இவர் சொல்லி சூர்யா/டேனியல் பாலாஜீல்லாம் நடிச்சாங்கன்னு நம்பவே
முடியலை. கம்ப்ளீட் வேஸ்ட். ஹ்ம்.. ட்ரான்ஸ் பார்த்தேன் நேத்து அதான் இப்டி.
அந்தப்பெண்ண கொலை செய் அப்டீன்னு சைகையால காட்றார். அதப்பாத்தா என்னவோ ஐஸ்க்ரீம்
வாங்கிட்டு வான்னு சொல்றா மேரி இருக்கு ஹிஹி… சொல்லப்போனா இவர்தான் படத்துக்கு
ஹீரோ. கேரக்டர் அஸாஸினேட் ஆக்கிட்டார்.!
ஆனாலும்
அந்த நஸ்ரியா கேரக்டருக்கு ‘ஆண்ட்ரியா’ தான் பொருத்தமா இருப்பாங்க ( ஹ்ஹி , வழிய
ஆரம்பிச்சிட்ட பாத்தீயாஆ..ஹிஹி) ஏன்னா அந்த மேரி ஒரு கேர்லெஸ் அட்டிட்யூட் உள்ள பெண்ணா
நடிக்க அவரத்தான் தேர்ந்தெடுத்திருக்கணும். மேலும் ஃபகத்துக்கும்
ஆண்ட்ரியாவுக்கும் உள்ள கெமிஸ்ட்ரி அத்தனை அம்சமா இருக்கும் ‘அன்னயும் ரசூலும்’
படத்துல.
எதோ பள்ளிக்கூடப்பிள்ளய கூட்டிட்டு வந்து
சிகரெட்டெலாம் ( அதுவும் ட்ரக்குள்ள சிகரெட்டாம். .ஹிஹி) குடிக்க விட்டு
தண்ணியடிக்க விட்டு பாடாப்படுத்தியிருக்காங்க மக்கா. ஸ்டைலிஷ் நடையில்லை, ஒரு
க்ளாமர் லுக் இல்லை, இதெல்லாம் வந்து ஒரு மெகா ஸ்டாரை வந்து மயக்குதாம் நாம
அதப்பாக்கணுமாம்..அடச்சீ. ஒரு வேள நஸ்ரியாவே இது மாதிரி எவளாவது கூட நடிச்சு
ஃபகத்தை கொத்திண்டு பொய்ட்டாள்னா, அப்டீங்கற பயத்துலயே நானே நடிக்கிறேன்னு
சொல்லீருக்கும் போல. பர்த்தாவும் பதிவிரதையும். ஹிஹி.
ஃபகத்தும் என்னென்னவோ மாயாஜாலம்லாம்
காட்றார். இருந்தாலும் ஓவர் ஆக்ட்டிங் தான் கெடுத்து குட்டீச்சொவராக்குது படத்த.
இவன் நடிக்கிறான்னு தெரிஞ்சா ஒரு அவார்ட் குடுக்கலாம்னு அவரே அவர
புகழ்ந்துக் கிர்றதுல்லாம் ..ஹ்ம்.. நாம வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இது மேரி
வசனமெல்லாம் தேவையா? இடவேளைக்கப்பிறம் இவனுக்கு ஒண்ணுமே ஆகாது இனிமே தான் சந்தரமுகி
ஆட்டம் ஆரம்பம்னு தெளிவா தெரியிற திரைக்கதை பெரும் ஓட்டை. இது எல்லா மதத்துலயும்
நடக்கிற கார்ப்பரேட் கசமுசா சமாச்சாரம் தானே? ட்ரான்ஸா இது ட்ராஷ்! #ட்ரான்ஸ்
No comments:
Post a Comment