Sunday, March 1, 2020

#சீரியல்பாட்டூ

எந்த சீரியல்களையும் நான் பார்ப்பதில்லை. அதற்கு நேரமும் வாய்ப்பதில்லை என்பது தான் நிஜம். இருப்பினும் இப்போதெல்லாம் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடைப் பொருட்களுக்கான விளம்பரங்களை விட சன் டீவியின் சீரியல்களுக்கான விளம்பரங்கள் தான் பெருகிக் கிடக்கின்றன. பார்த்தே ஆக வேண்டும் இல்லை யெனில் மறுபிறப்பில் கழுதையாகப் பிறப்பாய் என்று பயமுறுத்தாத குறை தான். இருப்பினும் அந்தந்த சீரியல்களின் முகப்புப் பாடல்கள், சொல்லப்போனால் ஜிங்கிள்ஸ்களின் (விளம்பரங்களுக்கான பின்னணிப்பாடல்கள்) தரத்தில் மிகநேர்த்தியாகவே வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்றே சொல்வேன். நிறைய சீரியல்களின் பாடல்கள் மனதைக் கவரும் விதமிருக்கின்றன என்பதே உண்மை.

அதிலும் ஜானர்கள் (பாணிகள்) வைத்துக்கொண்டு இசைப்பது என மெனக்கெடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. மின்னலே’ சீரியலுக்கான பாடல் கொஞ்சம் வெஸ்ட்டர்ன். நாயகி சீரியலுக்கான பாடல் ‘வா வா சந்தோசமா’அப்டியே ரஹ்மான் ஸ்டைல். ராப்’ பாடகரின் குரலில் பாடியது போல அத்தனை புதுமையானது. மகராசி முகப்பு பாடல் ராசைய்யா ஸ்டைல். அப்டியே மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு போட்டது போல அருமை. !அக்னி நட்சத்திரம் சீரியலின் பாடலை அப்படியே முழு மூன்று நிமிடத்துக்கு இசைத்தால் அருமையான மெலடிதான். யாரிசைத்ததப்பா ?... ராசாத்தி சீரியலுக்கான முகப்புப்பாடல் யுவன் இசைத்திருந்த ‘கோவா’ வில் ஒரு பாட்டு போலவே ரஸ்டிக் சென்ஸோட,சொம்மா அதையே காப்பி பேஸ்ட் அட்சா மேரி கலக்கல். இறங்கி வேல பார்க்கிறானுங்க மச்சா. கண்மணி சீரியலும் அப்படியே ராசைய்யா ஸ்டைல். புதுசா எதும் யோசிக்காம வில்லேஜ் ஸ்டோரி தானே அதான் அப்டியே அபேஸ்.! ரோஜா சீரியலுக்கு பச்சமலப்பூவு தான் தாளம். ஹ்ம்.. கேக்கலாம். சித்தி இன்னமும் அதே பழைய பாட்டையே போட்டுக்கிட்டு இருக்கார். அதனால அது வேணாம். ’கல்யாண வீடு’ம் வழக்கமான தமிழ்ப்பாட்டு.

எவ்வளவுதான் பாட்டுகள் வந்தாலும் அது எஸ்பிபி பாட்னா மேரி இருக்குமா.. கொண்டாங்கடா பாலுவ.. அதான் அழகு, எவ்வளவு நாளாச்சு இந்த பாலசுப்பிரமணியன் அண்ணாத்த பாடி. அதான் இருக்கதுலயே டாப்பு.. அழகம்ம்மா. எத்தனயோ பேர் பாடி வெச்சிட்டு போனாலும் அது பாலு பாடினா மேரி இருக்குமோ?! அண்ணாமலையாருக்கே பாலுண்ணா பாட்டுதான் பிடிக்குது,..ஹ்ம்.. #சீரியல்பாட்டூ.

No comments:

Post a Comment