விவேக்கின் உறுதிவிழாவுக்கு போகும்போது பின்பக்க கதவை மூடினேனான்னு சரியாக் கவனிக்கலை. மணி மூன்றரை இருக்கும் திரும்பி வந்து பாத்தா தர்பூசணிய தின்றுவிட்டு யாரோ உப்பரிகைல போட்டு வெச்சிருந்தாங்க.. நேத்து சாப்பிட்ட வெள்ளரிக்காயின் தோல்களை குப்பை தொட்டியில் போட்டு வைத்திருந்தேன். அது முழுக்க கீழே சிதறிக்கிடந்தது. யாராவது பிள்ளைங்க மேல் வீட்டுல இருந்து போட்ருப்பாங்க , கம்பிகள் வழியா உப்பரிகைல விழுந்துருக்கும்னு நினைச்சு மேல பாத்தா...ஆஹா.. அனுமார் கூட்டம். மந்திகள் ஒரு குடும்பமா வசதியா கம்பிகள்ல உக்காந்து ஒண்ணொண்ணா சாப்ட்டுட்டு கீழ போட்டுக்கிட்டு இருக்காங்க..
காடு காணாமலாகிறது. பக்கத்துல இருக்கிற நந்தினி பால் கழகத்தின் மரங்களைக்காடு என எண்ணி இங்க கிளம்பி வந்துட்டாங்க போலருக்கு, பாவம்.
வீட்டில் கொடுக்க பழமோ காய்களோ எதுவும் இல்லை. சரின்னு கொஞ்சம் பேரீச்சம்பழங்களை தட்டில் வைத்து ஏந்தினேன். சண்டை போடாமல் ஒண்ணொண்ணா எடுத்துக்கிட்டாங்க. அட அதில் குட்டிகளும் அடக்கம். கொஞ்ச நேரம் வெய்யிலில் காய்ந்துவிட்டு பிறகு எல்லோரும் சொல்லி வைத்தாற் போல கிளம்பி சென்றுவிட்டனர். #மந்தியும்காடுகளும்

No comments:
Post a Comment