கவிதா’வின் பொசல்
வாசித்துக்கொண்டிருக்கிறேன். நேற்று ஒரு செமினார் அதற்காக
335ல் ஏறி ரிச்மாண்ட் ரோட் வரை சென்று கொண்டிருந்தேன் கையில்
‘பொசலோடு’. பேருந்தின் இருக்கை அருகில் ஒரு முதியவர்
,தலையெல்லாம் தும்பைப்பூ. கையில் ஒரு பழைய பட்டன்கள்
மட்டுமே கொண்டிருக்கும் 2ஜி கைப்பேசி. பச்சை
பட்டன், சிவப்பு பட்டன் மட்டுமே முழுக்க அழிந்து போன ஒரு கைப்பேசி.
ஆங்காங்கே சில எண்களின் ஒரங்கள் அழிந்து அழிந்து நடுமத்தி வரை வந்திருந்தன.
சிறு கையேடு அதில் மளிகை சாமான் பட்டியல் மட்டுமே எழுதத்தகுந்த கையடக்கமானது.
ஒரு புறம் பெயர்களும் அதையொட்டி எண்களும் எழுதி வைத்திருக்கிறார்,
ஒவ்வொரு பக்கம்மாக புரட்டி புரட்டி எண்களை தெரிவு செய்து அழைக்கிறார்.
பொத்தான்களை அழுத்தி அழுத்தி. பெரும்பாலும் பெயர்கள்
கன்னடத்தில் இனிஷியல் மட்டுமே ஆங்கிலத்தில்.
கண்ணாடியை
உயர்த்தி விட்டுக்கொண்டு தலை தூக்கி பார்க்கிறார் சில சமயம். பிறகும்
அந்தக்கையேட்டில் உள்ள எண்களைத் தெரிந்தெடுத்து அழைத்துப் பேசுகிறார். பேச்சுக்கொடுக்க எத்தனித்தால் சட்டை செய்ய மறுத்தார். எனது உடைந்த கன்னடத்தில் பேச முயன்ற போது கையில் தமிழ்ப்புத்தகத்தை ஒரு முறை
பார்வையிட்டு விட்டு தமிழில் பதில் சொன்னார். ஏன் ஒரு அண்ட்ராய்டு
வாங்கிக் கொள்ளலாமே என்றேன். இல்லப்பா அதில பெயர் தேடிக்கண்டு பிடிக்க
ஆகுதில்லா. அதான் இப்படி என்றார். கத்துக்கலாமே,
ஹ்ம் அதுக்கெல்லாம் எங்க நேரம்?.. யாரைக்கூப்டறீங்க
? எல்லாம் என் நண்பர்களைத்தான், கார்ப்பரேஷன் வரை
போய் அவங்களைப் பாக்கணும் அதான் எல்லாரும் கெளம்பிட்டாங்களா என்னான்னு ஒவ்வொருத்தரா
அழைச்சிப்பாக்றேன் என்றார்.
கவிதாவின்
கதைகளில் இப்படியான பல வெள்ளந்தியான, சமகால நவீனங்களை புறந்தள்ளும் கதா
பாத்திரங்கள் உலவுகின்றன. சில கதைகளை அவரின் வலைப்பூவில் வாசித்த
ஞாபகம். பல சிறுகதைகள் கட்டுரையாகவே எனக்கு தோன்றியது.
இன்னமும் முழுதும் வாசிக்கவில்லை. வாசித்ததில்
நூலின் பெயர் கொண்ட சிறுகதை அருமை. இரு காதல் சமகாலத்தில் செய்ய
முற்படும் பெண்டிரின் சிறுகதை ஒரு சுஜாதாவின் சிறுகதையை ஞாபகப்படுத்தியது. விரைவில் முழு விமர்சனம் எழுதுவேன். நூல் ஆணை கொடுக்கும்போதே
சொன்னேன், காசு கொடுத்து வாங்கும் நூலுக்கு விமர்சனம் எழுதியே
ஆவது என்று… ஹாஹா. #பொசல்
.
No comments:
Post a Comment