இன்னிக்கு பக்கத்தில இருக்கிற மெடிக்கல் ஷாப்பில சில மாத்திரைகள் வாங்கப்போயிருந்தேன். ஆச்சரியம் மாத்திரைகளை ஒரு காகித உறையில் போட்டுக்கொடுத்தார். அந்தக்காகிதம் எதோ ஒரு புத்தகத்தின் ஒரு பக்கமாக இருந்திருக்கக்கூடும்.
அப்போதைய காலங்களில் எல்லாப்பொருட்களுமே காகித உறைகளிலேயே வழங்கப்படுவது வழக்கம். அப்படிக்கிடைத்த உறைகளை புரட்டிப்புரட்டிப்பார்த்து அதில் எழுதியிருப்பவற்றை வாசிப்பது வழக்கம் எனக்கு. சில சமயம் விகடன்/குமுதம் போன்றவைகளின் பக்கங்களிலும் உறைகள் செய்யப் பட்டிருக்கும். வாய்ப்பிருப்பின் சிறுகதைகளின் ஒரு பக்கத்தை நான்காக மடித்து பசை ஒட்டி அந்த உறையை அளவிற்கேற்ப தயாரித்து வைத்திருப்பர். பொதிந்து கொடுக்க. அப்படி சில சிறுகதைகளை அந்த சிறுமடிப்பிலேயே வாசித்துவிடுவது என்பதில் உள்ள சுகம் அலாதி.
.

வீட்டிற்கு வந்து அதனுள் இருக்கும் பொருட்களை எடுத்து வைத்துவிட்டு கவனமாக அந்த பசையை நீக்கி,(சில சமயம் கிழிந்து கொண்டே போகும் :))
, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முழுப்பக்கத்தையும் வாசிப்பது என்பது சால
சுகம். சில சமயங்களில் அந்தக்கதைப்பகுதி மிகப்பெரிதாக இருக்கும் பட்சத்தில்
, மீதக்கதையை நமக்குள்ளேயே புனைந்து கொள்வதும், இன்னொரு பொருள்
வாங்கியிருந்தால் அதன் தொடர்ச்சி அடுத்த காகித உறையில் இருந்திருக்க
வாய்ப்பிருக்கிறதே என்ற நப்பாசையும் கிளர்ந்தெழும்.
இப்பொதெல்லாம் மால் கலாச்சாரம் , காகித உறைகளையோ , இல்லை அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுகதை, கட்டுரைகளையோ வாசிக்கவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருப்பினும் இன்று வாங்கிய காகித உறை , எதோ ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கை போல வழவழவென இருந்த பக்கம், சுவைக்கவியலாத கட்டுரை. இருப்பினும் அந்தக்கால நினைவுகளை கிளறத்தவறவில்லை. இன்று கடலை வாங்கினால் கூட காகிதத்தில் வருவதில்லை. எல்லாம் அந்தக்கடையின் விளம்பரம் தவிர சுவாரசியமான பத்திகள் வாசிக்கவென எதுவும் வாய்ப்பதில்லை. ஒரே ஆறுதல், தீபாவளிக்கு வெடிகள் வெடித்து மிச்சக்குப்பைகள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருந்தன தெருவில் இங்கு, அவையனைத்தும் தினத்தந்தி நாளிதழின் பக்கங்கள்...! #காகிதஉறைகள்

Haha
ReplyDelete;) :)
Delete