Monday, September 10, 2018

#ஓலாஊபர்

ஓலா/ஊபர் பற்றி நிறையப்பேர் சென்னை அனுபவங்களைப்பற்றி எழுதுகிறார்கள். இங்கும் அதே பிரச்னை உண்டு. ஓட்டுநர்கள் பயணத்தை கேன்சல் செய்வது என்பது.முக்கிய காரணம் பெங்களூரில் உள்ள அரசு பஸ்ஸான வோல்வோ வஜ்ரா ஏசி சர்வீஸ் இப்போது கூடுதலாக மக்களால் விரும்பப்படுவதற்கு ஓலா/ஊபர் டாக்ஸிகளின் அட்ராசிட்டியே காரணம். டாக்ஸியில் இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்களுக்கு தொல்லை, குறிப்பிட்ட நேரத்துக்கு வராது நீட்டித்தல் போன்ற பல வெறுப்புகள் இப்போதெல்லாம் எல்லோரையும் அரசு ஏசி பஸ் சர்வீஸினை நோக்கி போக வைக்கிறது. 

இரவு இரண்டு மணி வரை பெங்களூர் விமான நிலையத்திலிருந்து எல்லா முக்கிய பாகங்களுக்கும் செல்ல பஸ் வசதி உண்டு. அதை விட்டால் அதிகாலை ஐந்து மணியிலிருந்து தொடங்கும். எப்போதும் எனது அத்தனை பயணங்களையும் இந்த நேரத்துக்குள் வந்து சேரும் படியாக அமைத்துக் கொள்வேன். ஓலா/ஊபர் இவர்களை நம்பிக் கொண்டிருந்தால் அதோ கதிதான். மேலும் இந்த ஓலா/ஊபர்களில் பயணித்த பின் வரும் ஃபீட்பேக்களில் நான்கு ஸ்டார்களுக்கு கீழ் கொடுத்த பயணிக்கு அடுத்தமுறை ஓலா/ஊபர் டாக்ஸி புக் பண்ண முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்ற குண்டும் உண்டு. இந்த எழவுகளுக்காகத்தான் நான் அதன்பின்னர் வரும் குறுஞ்செய்திகளுக்கோ இல்லை ஈமெயிலுக்கோ பதிலே சொல்வதில்லை :)
 
ஏர்போர்ட் செல்லும் வழிக்கு இந்த டாக்ஸிகாரர்கள் ”வாங்க கொண்டு போய் விடுகிறேன் பஸ் கட்டணம் கொடுத்தால் போதும்,ஷேரிங்கில் செல்லலாம்” என்று ஆசை காட்டுவர். ஏறினால் அதோடு தொலைந்தோம்.கண்ட இடங்களிலும் நிறுத்தி இன்னும் சில பலர் ஏறட்டும் சார் எனக்காக்க வைத்து கடைசி நொடியில் கொண்டு போய் சேர்ப்பர்.

எனக்குத்தெரிந்து எங்கள் ஏரியாவில் ஆறு ஏழு ஆண்டுகளாக ட்ராவல் சர்வீஸ் நடத்தி வந்த மலையாளி ஒருவர், ஓலா/ஊபர் போட்டியில் தொடர்ந்து நடத்த வியலாது அத்தனை கார்களையும் விற்று விட்டு ஒன்றிரண்டு கார்களை மட்டும் வைத்துக்கொண்டு எங்கள் ஏரியாவிலேயே எதோ சிறிய ட்ரைவிங் ஸ்கூல் நடத்திக்கொண்டிருக்கிறார் பாவம் வண்டி கேட்டால் வீடு வாசல் கொண்டு வந்து நிறுத்துவார்.. #ஓலாஊபர்

.

No comments:

Post a Comment