Saturday, March 18, 2017

லோகன் - ரத்தக்களரி


இப்டி ஒரு ரத்தமும் சதையுமா, பிச்சு எறியிற படம் சமீபத்துல பாக்கவேயில்லை. அடித்தூள் பறக்குது. ஹ்யூ ஜேக்மெனின், வுல்வரீன் அதிகம் நான் பார்த்ததில்லை. இது இந்த சீரிஸ்ல கடைசிப்படம் என்று சொல்கிறார்கள். புறங்கையில் குத்தீட்டிகள் முளைக்கும் ம்யூட்டன்ட் இயல்பில் உருவான மார்வெல் கார்ட்டூன் கேரக்டர். கார்ட்டூன் கேரக்டர்களில் ஸ்பைடர்மேன், பேட்மென் வரிசையில் இந்த ம்யூட்டன்ட். இதே போல ஸிஸர்ஹேன்ட்ஸ் என்றொரு படம். கை விரல்களுக்குப் பதில் அவனுக்கு கத்திரிக்கோல்கள் இருக்கும். பூஞ்செடிகளை அவற்றாலேயே அழகு படுத்துவான்.



ஹ்யூ ஜெக்மென் எனக்கென்னவோ அசப்பில இந்த மேக்கப்ல நம்மூரு விக்ரம் மாதிரியே இருக்கார். உடல்மொழி, நடை உடை பாவனை எல்லாமே நம்மாளுதான். தாடி கூட பொருந்துதுன்னா பாத்துக்குங்களேன். பாட்ரிக் ஸ்டூவர்ட் வயதான கேரக்டரில் வீல் சேரில் உட்கார்ந்து கொண்டே உலகத்தையே ஸ்தம்பிக்க வைக்கிறார். ஒவ்வொரு முறை அவர் மீது தாக்குதல் நடத்த எத்தனிக்கும்போதும் , ஆஹா.. ஆற்றல் அந்த அறையை மீறி வசிப்பிடம் கடந்து ஊரின் எல்லை வரை பரவுகிறது.ஹா... யாராலும் தாக்குப்பிடிக்க இயலுவதில்லை. சாலையில் அடைத்து வைக்கப்பட்ட வண்டியிலிருந்து குதிரைகள் தவறுதலாக வெளியேறிச் சென்றுவிடும், அவற்றை மீளக்கொண்டு வருவது என அத்தனையும் சாத்தியமான விஷயங்கள்.



ஃபாஸ்ட் கட் இங்க தமிழ்ல செய்தாலும் இந்தப்படம் தான் ரியல் ஃபாஸ்ட் கட். ஒரு செகன்ட் கூட சலிக்காத எடிட்டிங். அந்தச்சின்னப்பெண் லாரா பின்னி எடுக்கிறாள். அதீத சக்தி கொண்ட இனம் உருவாக்கப் படுகிறது. இதே போல நைட் ஷாமளன் 'ஏர் பென்டர்' எடுத்தார். அதுபோல இங்கு செயற்கையாக உருவாக்கப் பட்ட ம்யூட்டன்ட் இனம் அவள். வன்முறையின் உச்சம் அத்தனை சண்டைக்காட்சிகளும். முதல் பாதியில் அந்தப்பெரியவரையும் , சின்னப் பெண்ணையும் அள்ளிப் போட்டுக்கொண்டு வில்லன் கோஷ்ட்டியிடமிருந்து தப்பிக்கும் காட்சிகள் கிட்டத்தட்ட 20 நிமிடத்துக்கும் மேலே. அத்தனையும் பரபரப்பு. இப்படி ஒரு கன்டினியூட்டி. எப்படித்தான் எடுத்தார்கள் எனத்தெரியவேயில்லை. கடைசியில் ஒரு ட்ரெயினை அதிரடியாக கடந்து சென்றுவிடுவதில் முடியும் ...யப்பா... ட்ரான்ஸ்போர்ட்டர் சீரீஸுக்கப்புறம் அத்தனை சீட் நுனித்தருணங்கள் அவை.


பேட்ரிக்கின் ஆற்றலை அத்தனை உத்வேகமாக நம்மை உணரவைக்கும் இசை. அதிரடி இசை என்பதெல்லாம் இக்காலத்தில் சர்வ சாதாரணமாகி விட்டபோது , இங்கோ நல்ல தீம் இசையுடன் அதிரவும் வைக்கிறது. விட்டால் நம்மையும் நிலைகுலைய  வைத்து விடுவது போல அடக்கிவைக்கிறது நம்மை.

என்ன வழக்கம்போல எல்லா ஹாலிவுட் படங்களிலும் காட்டப்படுவதுபோல மெக்ஸிகோ/சீனா/ஜெர்மன் நாட்டுக்காரர்கள் மட்டுமே உலகத்துக்கு கெடுதல் செய்வார்கள் எனவும், இப்படியாப்பட்ட ரெய்ஸ் டுத அக்கேஷன் சூப்பர் ஹீரோஸ்லாம் அமெரிக்கக்காரர்களாக இருப்பதும் மட்டுமே சாபம்.படத்தில் மற்றதெல்லாம் கிடைத்தற்கரிய கனிகள்.





2 comments:

  1. அருமையான விமர்சனம் தோழர்
    வுல்வோரின் கனடிய பின்புலம் கொண்ட சூப்பர் ஹீரோ ...
    அமரிக்க சூப்பர் ஹீரோ பட்டியலில் இருந்தாலும் பயல் கனடா என்பதுதான் செய்தி.

    எக்ஸ்.மென் ஆரிஜின்ஸ் பாருங்க ..

    ReplyDelete