எப்பவும்
சாயங்காலம் நேரம் கிடைத்தால்
SVBC
TTD சேனலில்
ஆறு மணிக்கு வரும் கலை
நிகழ்ச்சிகளை பார்ப்பது
வழக்கம்.
பாடல்,
ஆடல்,
இசைக்கச்சேரிகள்
என முழங்கும்.
இன்று
கதக் நடனம் பாம்பேயிலிருந்து
ஒரு குழு ஆடினர்.
வடநாட்டு
இசை,நடனங்கள்
அத்தனை ஈர்ப்பதில்லை எனை.
எதோ
கமல் 'விஸ்வரூம்'
எடுத்து
கதக் ஆடினாரேன்னு இன்னிக்கு
பார்க்கலாம்னு உட்கார்ந்தேன்.
குழுவாகவும்
,
பின்னர்
தனியாகவும் நடனப்பெண்மணிகள்
மேடையை ஆக்ரமித்து நடனமாடினர்.
எனக்கு
இந்த பரத நாட்டியம் பார்த்தே
வழக்கம்.
கர்நாடக
இசைக்கச்சேரிகள் போல.
வடக்கத்தியரின்
ஹிந்துஸ்தானியோ இல்லை
பிருக்காக்களோ என்னை ஈர்ப்பதில்லை.
இவங்க
ஆட்றாங்க என்பதே எனக்கு
பெருத்த சந்தேகமாகவே இருந்தது
ஒன்றரை மணிநேரமும்,
ஏன்னா
இப்போ எப்டி ஆடணும்னு காமிக்கிறேன்
பாருங்க என்பது போலவே முழுக்க
ஆடினார்கள்.
உடல்
முழுக்க அசைந்து,
அடவு
பிடித்து,
வருத்தி
என ஆடிய நடனங்களையே பார்த்து
பழகிய எனக்கு யாரோ முன்னில்
இருப்பவர்களுக்கு எப்படி
ஆடவேணும் என்று சொல்லிக்கொடுப்பது
போலவே தான் இருந்ததே ஒழிய
கைகால்களை வீசி ஆடி நான்
பார்க்கவேயில்லை.
இடையிடையே
நின்ற இடத்திலேயேயிருந்து
சுற்றி சுற்றி ஆடினர்.
சுத்தி
சுத்தி வந்தீஹங்கற மாதிரி.
ஆனாலும்
ஒரு போதும் விழவில்லை.
சும்மா
இருமுறை சுற்றினால் நமக்கு
தலை சுற்றி தட்டுத்தடுமாறி
அருகிலிருக்கும் எதையோ
பிடிக்க தோணும்,
அப்படி
ஏதும் நிகழவில்லை இங்கு,
நல்ல
பேலன்ஸுடன் ஆடுகின்றனர்.
நின்ற
இடத்தில் நின்றே சுற்றி சுற்றி
அத்தனை முறை சுற்றினாலும்
அலுக்கவேயில்லை,
அசரவேயில்லை
அவர்கள்.
உள்ளங்கைகள்
இரண்டையும் ஒன்றோடொன்று
பிடித்துக்கொண்டு சின்னப்பிள்ளைகளை
ஏமாற்றுவது போல சுற்றி
வருகின்றனர்.
நடனப்பெண்மணிகள்
நின்று இரண்டு நிமிடம் கழித்து
அவர்களின் பாவாடைகள் நிற்கின்றன.
பெரும்பாலும்
சூஃபி நடனங்களில் இது போன்ற
சுற்றல்கள் உண்டு,
எங்கெங்கொ
பார்த்தது.
இடத்தை
விட்டு நகராமல் சுற்றுவதைத்தவிர
வேறேந்த உருவகப்படுத்தலையும்
என்னால் கவனிக்க இயலவில்லை.
ஆமா
இதில் என்ன நடன அசைவுகள்
இருக்கின்றன ?
நளினம்
,
அடவுகள்
இதெல்லாம் எங்கே ?
கால்களுக்கு
என ஒரு ஒலிவாங்கி மேடையில்
வைக்கப்பட்டிருக்கிறது.
கால்களில்
கட்டியிருக்கும் சலங்கைகள்
ஒலியை பெருக்கி கொடுக்க.
கொஞ்சமே
பாவாடையை உயர்த்திக் கொண்டு
,
பாலே
நடன அழகிகள் போல ஒற்றை கால்
பெருவிரலில் நின்றூகொண்டே
நீந்திச்செல்லும் அன்னம்
போலின்றி,
பாதங்களை
முன்னும் பின்னும் நகர்த்தி
(இங்கு
தான் சொஞ்சம் வேகம் பார்த்தேன்.)
ஆடினார்
கொஞ்சம் சீனியர் நடனமங்கை.
ஒரு
விஷயம் சொல்லியே ஆகணும்.
ஆடிய
யாருக்கும் நடனமங்கைகளுக்கான
உடற்கட்டே இல்லை.
ஒரு
வேளை இந்தக்குழுவில் இல்லையோ
?
ஏனென்றால்
,
உடலை
முறுக்கி,
கைகால்களை
வீசி ஒரு உடற்பயிற்சி செய்யும்
இளைஞர்கள் போன்ற ஆடல் இங்கு
இல்லவே இல்லை.
அதனால்
அவர்கள் உடல் நடனமங்கைக்கானதாக
இல்லையோ என்னவோ ?
அதுக்காக
சைஸ் ஸீரோ எல்லாம் எதிர்பார்க்கவில்லை.
மேலும்
அத்தனை எனர்ஜி ஆட்டம் முழுக்க
சேமிக்கப்படுவதால் அவர்களால்
விழாமல் சுற்றமுடிகிறது
போல…!
.
No comments:
Post a Comment