மௌனராகம்
கருவிசை..கேட்டுக்கேட்டு
இன்புற்ற இன்னும் நாடி
நரம்புகளில் எல்லாம்
ஓடிக்கொண்டிருக்கும் இசை.
அருமையான
பியானோவில் இசைத்த அதே
இசைக்குறிப்புகள் இன்னும்
தாள கதி வேகமாக்கி புல்லாங்குழலில்
இசைத்திருக்கிறார்.
இத்தனை
நாளாக எனக்கு இது புரிபடவில்லை.
எப்போதும்
ஓடிக்கொண்டிருக்குமது இன்று
என் தலைக்குள் சுற்றி சுற்றி
பொறி தட்டியது,
கேளுங்களேன்,,
அதே நோட்ஸ் முன்னர் ரேவதி/மோகனுக்காக மென்மையான உறவை சொல்லக்கூடியது பின்னில் வரும் அந்த புல்லாங்குழலில் இசைக்கும் அதே இசைக்குறிப்புகள் தாளகதி மாற்றி ரேவதி/கார்த்திக்கிற்காக ,அதிரடியான குறும்பும் கேலியும் மிக்க காதலுக்காக. மீளுருவாக்கம் (ரீமிக்ஸ்) என எண்பதுகளிலேயே நிகழ்ந்திருக்கிறது.
00:08
ல்
ஆரம்பித்து 00:24
வரை
பியானோவில் இசைக்கப்படும்
குறிப்புகள் பின்னர் அவையே
ரீமிக்ஸாகி வேகமாக இப்போது
இசைக்கப்படுவது போல 00:29லிருந்து
00:51
வரையென
ஆஹா..
எத்தனை
சுகம்..!
ஒரே ராகத்தை டெம்ப்போ (வேகம்) மாற்றி இசைக்கும்போது மகிழ்விற்கும் துயரத்திற்குமென உருமாறி நம்மைச்சுற்றி வருகிறது. நாயகன் படத்தில் மூன்று பாடல்கள் ஒரே ராகத்தின் அடிப்படையில் அமைந்தவை. இருப்பினும் காட்சிகளுக்கேற்ப உருமாறி வேறு கோலங்கள் காட்டும்...ஹ்ம்.. ராசைய்யாடா!
.
No comments:
Post a Comment