அடெலின்’ புதிய பாடல். Easy on Me’ அப்படியே அவரின் பழைய பாடலான ‘Hello’வின் மறுபதிப்பு.. ஹ்ம்… இப்பாடலைப்பற்றிய பதிவுகள் விளம்பரங்கள், விவாதங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏகத்துக்கு எக்கச்சக்க அளவில் பரவிக்கிடந்தது. எனக்குந்தான். முடிவில் எதிர்பார்த்தது போல ஆறின காப்பி. இவரின் குரல் ஒரு ஆப்ரா சிங்கரின் குரல். விட்னி ஹூஸ்டனின் பாடல் கேட்கலாம் ‘Bodyguard’ல் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அழுத்தமான பாரம்பரிய இசை கொண்ட ராகங்களின் அடிப்படையில் அமைத்துவிடுவார். அதுவும் அப்படியே கேட்போர் மனதில் ஒட்டிக்கொள்ளும். கேட்டு முடித்த பிறகும் எதிரொலி போல ஒலித்துக்கொண்டேயிருக்கும் தலையில். சூயிங்கம் போட்டாலும் அகலாது இசைக்கும் தலைக்குள்.
அடேலிடமிருந்து இப்போதைய ஒலீவியா ரோட்ரிக்ஸ் போல ராக் இசை/ ஹிஸ்பானிய இசையெல்லாம் எதிர்பார்க்க இயலாது. இருப்பினும் எனக்கென்னவோ ஆப்ரா சிங்கர் அடேலின் குரல் நம்ம அருணா சாய்ராம் (விஷமக்காரக்கண்ணன்) குரலை ஒத்திருப்பது வியப்பன்று. என்ன ஒன்று அவரின் குரலுக்கு கொட்டிக்கொடுக்கலாம். இப்பவே 10கோடி பார்வை கடந்து இன்னமும் சென்றுகொண்டிருக்கிறது ஊட்டூபில்.
”நல்ல எண்ணங்களும் வலுவான நம்பிக்கையும் கொண்டிருந்தேன் இப்போது பார்த்தால் அவையாவும் வெளித்தெரியவேயில்லை. ” இது அவரின் இப்போதைய பாடலைப்பற்றிய எந்தன் கருத்து இல்லை. பாடல் வரிகள்… ஹ்ம்.. அப்படியும் வைத்துக்கொள்ளலாம்.
I had good
intentions
And the highest hopes
But I know right now
It probably doesn't even show
Verse and Chorus ஒன்றுமில்லை நம்ம பல்லவி சரணம் தான்.
வெஸ்ட்டர்ன் இசையில் இப்படியாப்பட்ட பெயர் அது. Bridge என்ற ஒன்று வரும். அதை
அப்படியே அனுபல்லவி என்று அழைத்துக்கொள்ளலாம். மேலே எழுதியிருக்கும் வரிகள் மேலே ஆங்கிலத்தில்
எழுதியிருக்கும் வரிகள் bridge’ போல
அவரின் புலம்பல்களை ஒன்று சேர்க்கிறது.
#EasyOnMe
No comments:
Post a Comment