Monday, July 27, 2020

ரஹ்மான்

கொஞ்சம் வளர்ந்துவிட்டால் யாருக்கும் பிடிக்கத்தான் செய்யாது. ஹ்ம் =இதென்ன புதியதா ? இனியும் எனக்கே வாய்ப்பு தரவேணும் என்ற விருப்பத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அவரைப்போல எத்தனையோ இளைஞர்கள் வரத்துடிக்கும் துறை அது. பெருவாரியான ஆதரவைப் பெறுவது என்பது ரசனையைப்பொருத்த விஷயம். இவருடன் அவர் காலத்தில் வந்த இளைஞர்களின் இசையால் ராசைய்யாவின் வாய்ப்புகள் குறையத்தான் செய்தது. வயதானால் வழி விடவேணும். புதியவர்களை அறிமுகப்படுத்தும் சூழலுக்கு யாரும் எதிராக இருக்க முடியாது.

இனியும் பிறர் கூறும் சூழலுக்குத்தான் இசையமைக்க வேணும் என்ற கால கட்டத்தை எப்போதோ கடந்து விட்டார். தாமாக உருவாக்கலாம். உண்மைக் கலைஞனை யாராலும் தடுக்க இயலாது. தாமாக தனிப்பாடற் திரட்டுகளை வெளியிடலாம். திரையில் தான் இசைக்க வேணும் என்ற கட்டாயமும் இல்லை. இவரே ஒரு சிறு குழுவாக ,வெளி நாட்டவரைப் போல இசைத்துக் கொண்டிருந்தவர் தானே ? எப்பக்கமும் செல்லவியலாதவாறு கட்டுப்பாடுகள், அழுத்தங்கள் கொடுக்கப் படுகிறது , அப்படி செயல்படுத்த தொடங்கியிருக்கிறார்கள் என்றால் அதை எதிர்த்து குரல் கொடுப்பது சரி. அங்கனம் ஏதும் இருப்பதாக தோணவில்லை...ஒரு துறை மட்டுமல்ல, இசை பரந்து விரிந்த வானம் கொண்டது. #ரஹ்மான்

https://www.facebook.com/RamChinnappayal/posts/10217841002165442

No comments:

Post a Comment