மைலி சைரஸ் அத்தனை
சிறப்பாக பாடக்கூடியவர் அல்ல. அத்தனை பெரிய பெயரும் இல்லை இவருக்கு. இருப்பினும் இந்தப்பாடல்
அடிக்கடி இப்போதெல்லாம் ஒலிக்க விடப்படுகிற்து அத்தனை இசைச் சானல்களிலும் ரேடியோப்பெட்டிகளிலும்
கூட. இவாவோட பெற்றோரும் பாட்டுக்காரா தான். இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படியான பாடல்களை
பாடவில்லை இவர். சமகாலத்திய டெய்லர் ஸ்விஃப்ட், கேட்டி பெர்ரி, எல் கோல்டிங், மராயா
கெரே,மற்றும் சிலரைப்போல அத்தனை எதிர்பார்ப்புகள் இல்லாத பாடகி. இவரும் பாடுகிறார்.
’அம்மாவின் மகள்’
என்ற இந்தப்பாடல். காணொலி அத்தனை உரியதல்ல அனைவரும் காண்பதற்கு. இருப்பினும் விரசமின்றிக் காண்பிக்க
எத்தனித்ததற்கு நன்றி. ’She is Coming’ என்ற ஆலபத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றிருக்கிறது.
Don’t Fuck with My Freedom’ அதிரடியான வரிகள். சாதாரண பாப்’ வகையறாப்பாடல். முன்கூட்டியே
தீர்மானிக்க கூடிய வகையிலான தாளம், இப்படித்தான் முடியும் என்று கொஞ்சமும் சுவாரசியமற்ற
பாடல் ஊர்ந்துசெல்லும் வகை என்றிருந்த போதும் கேட்க வைத்துவிடும் பாடல் இது. சீஸனல்,
கொஞ்ச நாளில் பட்டுப்போகும் வகை. இதை நம்பித்தான்
பெரும் பாடகர்களின் பிழைப்பு ஓடுது. யாருக்கும் ஆற அமர்ந்து இசைக்க விருப்பமில்லை.
இது நாள் வரை சிந்த்தில்
இல்லாத தாளக்கட்டுடன் வரக்கூடிய பாடல்கள் என்பதே இல்லை என்றாகி விட்டது. யாருக்கும் யோசிக்க நேரமில்லை. புதிதாய் உருவாக்க
விழைவதில்லை. இருப்பதை வைத்து சமாளிக்க எத்தனித்தல். மைக்கேல் ஜாக்ஸனுடன் போனது புதிய வகை தாளம். “All
I Want to is say that, they don’t really care about us” என்ற பாடலின் தாளம் இது வரை கேட்டிராத வகை. எதோ ஆப்ரிக்க/ஹிஸ்பானிய
வகை தாளம் அது. அதைக்கொணர்ந்து கொட்டினார் மைக்கேல். ‘இள நெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்’
ராசைய்யா இசைத்த பாடல். பாடல் முழுக்க தாளம் கேட்டுப்பாருங்கள் எங்கும் கேட்டிராத வகை.
தண்ணீருக்குள் தாம்பாளத்தை வைத்து அதில் பெரும் கழி கொண்டு அடித்தது போல இருக்கும்.
‘நிற்பதுவே நடப்பதுவே’ பாரதி பாடல். ஆரம்ப இசையில் ஒலிக்கும் அந்த தாளம். க்ஸைலஃபோனில்
இசைத்தது போல.(அவர் எதில் இசைத்தார் எனப்புரிபடவில்லை.) கடந்து வருவது சிரமமான தாளக்கட்டு.
ரஹ்மானின் ‘அடி மஞ்சக்கெழங்கே’ கேட்டுப்பாருங்கள். தடாலடியான அடியாக இருக்கும். எப்போதாவது
ஒலிக்கும் அப்படிப்பட்ட தாளம் , இசை.!
பெரும்பாலான வெள்ளைஇன
ஆண்கள்/பெண்கள் இசைக்கும் இசை இப்போதெல்லாம் மூன்றடி சிந்தஸைசருக்கும் அடக்கம் கொண்டு
விட்டது. அதை மீறி யாருக்கும் யோசிக்க இயலவில்லை, நேரமுமில்லை. கருப்பின இளைஞர்/ஞிகளின்
இசை ராப்/ஹிப் ஹாப்பைத்தாண்டி ஒலிப்பதில்லை. எளிது எளிது ராப் இசைப்பது. வரிகளை அடுக்கிக்
கொண்டே போ, அவை தாமாகவே ஒரு இலக்கை எட்டும் முடித்து விடு. அவ்வளவுதான் இலக்கணமே.
‘பேட்ட ராப்’ கேட்டோம்லயா அதான்.
மொத்தமே மூன்று வகைப்பாடல்கள்
தான் இருக்கு இப்போதைய ஆங்கிலப் பாடல்களில்.
பெண்குட்டிகள் பாப்’பை விட்டு வெளி வருவதில்லை. ஆண்கள் ராப் என்ற பெயரில் சீரழிவது.
இல்லையெனில் பாப்பில் தொடங்கி சிறிது இடைவெளியில் ராப்/ஹிப்ஹாப்’பை கொண்டு வந்து உருவேற்றுவது
என்ற டெம்ப்ளேட்டுக்குள் அடங்கிக்கிடக்கிறது ஆங்கில ஆல்பங்கள். இத்தனைக்கும் இவையனைத்தும்
தனிப்பாடற்திரட்டுகள் தான், எதோ திரைப் படத்துக்கோ இல்லையெனில் யார் சொல்லியே உருவாக்குவது அல்ல.
இசைக்கருவிகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கின பாடல்களெல்லாம் ராப்’பேறிபோய் வீணாகிக்கிடக்கிறது.
எல்டன் ஜான், எரிக் க்ளாப்டன், ஈகிள்ஸ் போன்ற வகைப்பாடல்கள் எல்லாம் மலையேறிவிட்டது.
உருப்படியான ராக்’ இசையும் இப்போது இல்லை.
அதிலும் ஏகப்பட்ட திருட்டுகள், உருவல்கள், பின்னர் வழக்குகள் . அதிகமான பாடற்திருட்டுக்கும்
இசைத்திருட்டுக்கும் புகழ் போனவர் அம்மணி கேட்டி பெர்ரி. சளைக்காது போராடுவார் இல்லையெனில்
ஆஃப் த கோர்ட் செட்டில்மெண்ட் கொண்டு முடிப்பார்.தன்னிசை தனியிசை என உருவாக்குவோர்
எவருமில்லை. கேட்போருக்கும் அது பற்றிய ஞானம் இல்லை.
திரும்ப மைலி சைரஸுக்கே
வரலாம். அண்மையில் இவருக்கு ஆனது மணமுறிவு. எட்டு மாதம் தாக்குப்பிடிக்கவியலாத மணம்.
ஒருவேளை இந்தப்பாடல் கூட அதன்பிறகு உருவானதாக இருக்கலாம்.ஹிஹி.. Don’t Fuck with
My Freedom’ ஒருவகையில் இந்தப்பாடல் லெஸ்பியனிஸத்தை ஆதரித்து எடுக்கப்பட்டது போல தெரியும்.
காணொலியின் பல பகுதிகள் அதை உறுதிப்படுத்தும் முட்கிரீடம் எங்கு அணிந்திருக்கிறார்
என்பதைப் பார்த்தாலே தெரிய வரும். நான் என் அம்மாவின் மகள், அதனால நீ தேவையேயில்லை.
So, back up, back up, back up, back
up, boy, ooh.. இதையே
பத்து தடவைக்கும் மேலேயே பாட்றார். I'm nasty, I'm evil Must be something in the water or that
I'm my mother's daughter சத்தியமா
எனக்கு இந்த வரிகள் புரியவேயில்லை. ஹிஹி.!
இப்போது எந்தப்பாடலைக்
கேட்க முற்பட்டாலும் , இது எதிலிருந்து உருவப்பட்டது என்ற சிந்தனை தான் ஓடுகிறது பாடலைக்கேட்க
எத்தனிப்பதேயில்லை. ஐயோ பாவம் ரசிகர்கள். இந்தப்பாடல் ஒலிக்கும் தாளத்தில் என்னால்
பத்தாயிரம் ஆங்கிலப் பாடல்களைப் பட்டியலிட முடியும் :)
"Every Woman Is A Riot", "Sin is in your
eyes", "L'herorisme de la chair" which means "the heroism
of the flesh." என்பன போன்ற வாசகங்கள் பாடல் ஒலிக்கும் திரையில்
பளிச்சிடுகிறது. இவையனைத்துமே ஃபெமினிஸ வாசகங்கள் என கனடாவிலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது.
என்னுடைய வாசகங்களை அவர் பாட்டில் பயன்படுத்திக்கொண்டார் என.
No comments:
Post a Comment