அன்புள்ள அப்பா. ஆஹா.
விஸ்வாசம். அர்னால்ட் ட்ரூ லைஸ்,கமாண்டோ’ன்னு ஒரு படம் பண்ணினார். இப்டித்தான் குடும்பத்த காப்பாத்றேன்னு புள்ளயக் காப்பாத்றேன்னு அடிச்சு புரட்டுவார். இங்க தூக்கு துரை தாம் அழுவது மகளூக்கு தெரியக்கூடாதென காரை விட்டு வெளியேறி நிற்கிறார்.மழை பெய்கிறது. மம்மூட்டி ஒரு படம் பண்ணினார்.
மூணு பொண்ணுகள்ல உம்பொண்ணு ஒண்ணு இருக்குன்னு சொல்லக்கேட்டு அலைக்கழிவார். ஆனந்தயாழை
மீட்டுகிறாய்னு இயக்குநர் ராம் கண்ணீர் விட்டழுதார்.
இப்படி ஏகப்பட்ட ஏற்கனவே விட்டழுத
கண்ணீரின் மீதி மிச்சம் சென்டிமென்ட்’வாசம் விஸ்வாசம்.ஹிஹி. பாக்றவங்கள பொங்க வெக்கிறார்.
’அறிந்தும் அறியாமலும்’ படத்துல அப்பான்னு கேட்டுச்சு என்பார் பிரகாஷ்ராஜ். இப்டி எல்லாத்தையும்
கொஞ்சம் கலந்து கட்டி போட்டு பொங்க வெச்சிருக்கார் சிவா.
தாம் மட்டும் தலக்கவசம் போடாது தம் மருத்துவச்சி பொண்டாட்டியையும்
போட வெக்கிறார்.அப்பால அந்த தலைக்கவசத்த வெச்சே ஒரு சண்டைய முடிக்கிறார் மழையோட. செமங்ணா
அந்த ஸ்டண்ட். நாப்பத்தேழு வயசுல இப்படியா முழுக்க முழுக்க வைட் ஃபோம் மண்டிப்போகும்
மொகத்துல ? அந்த பால்குண்டு சிவா’வுக்குத்தான் வெளிச்சம்.
எவ்வளவு தான் வயசானாலும் அத வெளிக்காட்டிக் கொள்ள மனசார விரும்பும் கேரக்டர். இருப்பினும்
அடிதடியில் கிஞ்சித்தும் குறைவில்லை எனக்காட்டிக்கொள்ள விரும்பும் நார்ஸிஸம். ஹாலிவுட் ஜார்ஜ் க்ளூனி ஸ்டைலில் ”சால்ட் அன் பெப்பர” தொடங்கி
வெச்ச ”வாசுகி பாஸ்கருக்கு” வாழ்த்துகள்.
ஒய்யாம பஞ்சாயத்து இழுக்காத, சண்டை போடாதன்னு சொல்லி மருத்துவச்சி கோவிச்சிட்டு போய்ட்றார். இவர் ஆரம்பிச்சதே
அப்டித்தானே? உல்லாசம் படத்துல ஆரம்பிச்சது இரபத்திரெண்டு வருசமா இப்ப வர இழுத்துக்கிட்டு
இருக்கு. தாம் புள்ள செவிக்கணும்னு எவனாவது இன்னொரு புள்ளயக்கொல்லத்துணிவானா ? ஹ்ம்..
கையக்கால ஒடச்சிப்போட்டா அது பாட்டுக்கு ஓடாம
மொடங்கிக் கெடக்கப் போவுது.வில்லனின் ப்ளாட் சரியாவே ஒர்க்கவுட் ஆவலை. பேசாம அந்தப்புள்ளய
பிட்ச்சி கொண்டந்து வழக்கம்போல குடவுன்ல அட்ச்சி வெச்சு தல’க்கி போன் போட்டு களேபரம்
பண்ணிருக்கலாம்.ஹ்ம், ஓஹோ அது க்ளீஷேங்ணா. அதான் பண்ணல.
இன்னாப்பாஆ படத்துல நல்ல காஷிகளே இல்லியா ? இருக்கே.. அப்பனும்
புள்ளயும் ஒவ்வொரு வாட்டியும் வீட்டுக்கு லேட்டா வந்து மருத்துவச்சி கிட்ட கை கட்டி
நிக்கிறது. பாட்டு வங்கறது அம்சங்ணா. அடிச்சுப் புடிக்கிற பயலுவள எல்லாப் பொண்டுகளுக்கும்
புடிக்குந்தேன். ஆனா மூணு முடிச்சு போட்டப்புறமும் அத தொடரப்பிடாது அது பிடிக்காம போய்ரும்.
அவா சொல்றத கேட்டுட்டு பொட்டிப் பாம்பா அடங்கணும். அங்க தான் நம்ம பயலுவளுக்கு பெரச்சன.
பாதுகாப்புக்கும் பயத்துக்கும் ரொம்ப தூரம் இல்லைங்கறார் சிவா. கேட்டுக்கலாம்.
கண்ணான கண்ணே’ன்னு சித்து சிரிராம் அப்பப்ப பாட்றார். சிலிர்க்குது . அத்தத்தவித்து வேற எந்தப்பாட்டும்
சகிக்கலை. டீ/சீக்ரேட்க்கு வெள்ல போறதுக்கு மட்டும் பயன்படுது. ஹிஹி. ரொம்ப நாளைக்கிப்பிறகு
விவேக் ஆகா.. சிம்’ம மாத்துனாலும் வாய்ப்பாட்டு வாங்கறார்.
’உன்னை அறிந்தால்’ படத்துல சொம்மா அந்தப் புள்ளக்கி கேர்டேக்கரா
இருந்தார் அஜீத். இந்தப் படத்துல அதே புள்ளக்கி அப்பனாய்ட்டார்.. ஹிஹி.. அடுத்த படத்துல
டூயட் பாடீருவார். ஹிஹி. காதல் மன்னனோட எல்லாக் கதைகள்லயும் பொண்ணுகள மரியாதையா நடத்துற
மாதிரி அத்தனை படத்துலயும் கேரக்டர்களை அமைத்துக் கொள்கிறார் தல. வாழ்த்துகள் தல.!
சிவா’வுக்கு கை கொடுக்கலாம், ஹிஹி ஆனா கட்டிப்பிடிக்க முடியாது
..ஹாஹா :) #சென்டிமென்ட்வாசம்
"தாம் புள்ள செவிக்கணும்னு எவனாவது இன்னொரு புள்ளயக்கொல்லத்துணிவானா ?"
ReplyDelete.
நீங்க படத்தை சரியாக பார்க்கல
தன் பிள்ளை ஜெயிக்க கொலை செய்ய வரவில்லை
தன் பிள்ளை நிரந்தர ஊனமாக காரணம் அஜித் பிள்ளை தான் என்று அதை கொல்ல வருவான்
தன் பிள்ளை தோல்வியே அடைய கூடாது என்று சொல்வானே தவிர குறுக்கு வழியால் வெற்றி அடைய வேண்டும் என்று வில்லன் சொல்லவில்லை
வில்லன் கொஞ்சம் சைக்கோ என்று ஏற்கன்வே காட்டி இருக்கின்றார்கள்
விசுவாசம் குசுவாசம்
ReplyDeleteபேட்ட முன் விசுவாசம் வெறும் குசுவாசமே
பால கணேசன்