எனக்கே
தெரியாம சாயங்காலம் ஆறுமணிக்கே
லிரிக்ஸ் வீடியோவோட பாட்டை
ரிலிஸ் பண்ணி விட்டான் தம்பி
அநிருத் :) நல்லவேளை
'நெருப்புடா'
புகழ் அருண்ராஜ்
காமராஜ் பாடவில்லை இந்தப்பாடலை.
இல்லன்னா
ஒரே க்ளீஷேவா போயிருக்கும்.
கவனமாத்தவிர்த்து
விட்டான் தம்பி :) யோகிபி
- திரும்ப
வந்திருக்கார். அவரோகணம்
கீழிறங்கும் ஸ்ருதிகள் இல்லாத
பாடல் போல இதுவும் ஒன்று.
ஒவ்வொரு
நிமிடத்துக்கும் இடைவெளியில்
மீண்டும் மீண்டுமாக மேலேயே
பயணித்துக்கொண்டிருக்கும்
பாடல். இப்டி
வெச்சுக்கலாம் , யுவன்
சரோஜால 'நிமிர்ந்து
நில்' அப்டீன்னு
ஒரு பாட்டு போட்ருந்தார்.
இந்தப்பாடல்
கூட சொல்லலாம் (யுவனின்
இன்னொரு பாடலும் அதேபோல மேல்
ஸ்ருதியிலேயே நின்றுகொண்டிருக்கும்
'இறகைப்போலே
அலைகிறேனே' இங்க
காதல் வீழ்ச்சியைக்கண்டு
விடக்கூடாது என்பதற்காக
வெறுமனே மேல் ஸ்ருதி மட்டுமே,,மேலேயே
முன்னேறிச்செல்லவேணும் என்று
..ஹிஹி
) அப்புறம்
'நாடோடிகள்'
படத்துல
நம்ம சுந்தர் சி பாபு பாடகர்
'சங்கர்
மஹாதேவனை'ப்பாட
வைத்து 'சம்போ
சிவசம்போ சிவசிவசம்போ'ன்னு
ஒரு பாட்டு போட்டிருந்தார்.
இவையெல்லாம்
ஒரு வகையிலான பாடல்கள்,
எழுப்புதல்
கூட்டம் போல..ஹிஹி..
புரட்சி
வெடிக்கும், வென்றே
தீருவோம் துவண்டு விடல் கூடாது
என்று அறிவுரை சொல்லாது
உணர்வில் வெளிக்காட்ட வைக்கும்
அற்புதப்பாக்கள் :) வணிக
நாயகனுக்கு தோல்வி இல்லை
என்பது போல எப்போதும் மேலேயே
சென்றுகொண்டு இருப்பார்.
ஆஹா!
என்னே ஒரு
சிந்தனை!
இங்கு
முகப்பிசை 'டெய்லர்
ஸ்விஃப்ட்டின் - Say you'll
remember me’ பாடலை
ஞாபகப் படுத்துகிறது.
ஸ்விப்ட்டின்
பாடலில் “Standing in a nice
dress,Staring at the sunset, babe “ இந்த
இரண்டு வரிகளைப்பிசைந்து
எடுத்து வைத்துக் கொண்டது
போன்ற முகப்பிசை. பின்னர்
தொடரும் அந்த லலலலா ல்லலாஆவும்
:) இந்த
ஒல்லிப்பாச்சி ஸ்விஃப்ட்
இப்ப புதுசா பாட்டு ஒண்ணும்
ரிலீஸ் பண்ணலை. இப்போதெல்லாம்
சின்னக்குட்டி நாத்தனார்கள்
தான் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர்.
ஏரியானா
க்ராண்டி அப்புறம் செலீனா
கோமெஸ் (ஆஹா..ஹ்ம்)
போன்ற சிறு
பெண்மணிகள் ..ஹிஹி..
:)
யோகி
பி இப்பதான் பொல்லாதவன்ல ஒரு
ரீமிக்ஸ் ஐயா எமெஸ்வி'யின்
'எங்கேயும்
எப்போதும்'னு
பாடீருந்தார். என்னவோ
அதையே ஞாபகப் படுத்துகிறது
, பாடல்
அதற்கு அருகில் கூட இல்லாத
போதிலும், அவர்
குரலும் பாடும் விதமும் கூட
ஒரு காரணமாக இருக்கலாம் .
பாடலை இடையில்
தம்பி அநிருத் தான் பாட்றான்.
இத்தனை
முரட்டுக்குரலுக்குள் சிக்கி
எலி போல எழும்புகிறது அவனின்
குரல் . லல்லாலான்னு
லல்லாபி பாட்றதெல்லாம்
ராசைய்யா காலத்துலயே முடிஞ்சு
போச்சே.. இப்ப
திரும்ப தூசி தட்டி கொண்டு
வந்துருக்கான் போல :)
ஆனாலும்
இந்த இடங்களில் இசை தெறிக்கிறது
ட்ரெம்ஸும் முறுக்கேற்றும்
எலெக்ட்ரிக் கிட்டாரின்
பாஸுமாக. ஆஹா..!
மேலும்
'சென்னை
சிட்டி கேங்க்ஸ்ட்டா'
பாட்டில்
வரும் You ain’t got no goa beach You ain’t
got no sharukh khan ,You ain’t got no India gate என்ற
வரிகள் போன்று இங்கு 'முயன்றால்
தான் சாத்தியம்' எனும்
சில இடங்களில் தெரிவதும்
குறை.
ஆனாலும்
எவ்வளவு சொன்னாலும் நம்ம தர
லோக்கலு 'ஆலுமா
டொலுமா' மேரி
இல்ல கண்ணு ! இந்த
ராப்/ஹிப்
ஹாப்பை எத்தன வாட்டி தான்
கேக்றது ?! ஹ்ம்..!
Gotta Getup ! #Surviva
No comments:
Post a Comment