Sunday, May 21, 2017

மஞ்சள் பூசும் வானம்






Twenty One Pilots , Stressed Out பாட்டு கேளுங்களேன். நல்ல ராப், அருமையான பீட். எல்லோரும் ராப் போட்றாங்கள். இருந்தாலும் , ஈஸியானது, அவ்வளவு யோசிக்கல்லாம் வேணாம். யார் வேணாலும் பாடலாம்ங்கற மாதிரி இந்த ராப்'பை மாத்திட்டாங்கள்/ எவ்வளவுதான் சொன்னாலும் , திரும்பத்திரும்ப வரும் பீட்(தாளம்) , வேற எதையுமே யோசிக்கவிடாத , நினைக்கவிடாத வரிகள் , ஒரு கட்டத்தில் சலிப்பூட்டத்தான் செய்யும். இருந்தாலும் சில பாட்டுகள் ராப்பின் அடிப்படையில் வைத்துக்கொண்டு , பிற இசைக் கோவைகளையும் சேர்த்து , ராப் வெளித்தெரியாமல் பார்த்துக் கொள்ளும் போது கேட்கத்தூண்டும். அப்படியான ஒரு வகையில் இந்தப்பாடல்.

ராப் கேட்கலாம். முன்னால நம்ம ஊருல 'அப்பாச்சி இண்டியன்'னு ஒரு ஆளு கடிச்சுகொதறிக்கிட்டிருந்தாரு. அதையும் கேட்டுக்கிட்டு தானிருந்தோம். இசை என்றால் ஏற்கனவே இருக்கும் ராகங்களை கொஞ்சம் கற்பனை கலந்து மெருகேற்றி பழைய வாசனை தெரியாது கொடுப்பது. மறுமாற்றம் மட்டுமே. எனக்கு இந்த ஸ்டைலுன்னு சொல்லிட்டு ப்ளாக்யரைஸ்டாவே தமது பாடல்களிலிருந்தே வெளிவரவே இயலாத ஆசாமிகளும் உண்டு. ஹாரிஸு அப்டித்தான். எமினெம் ராப்பில் நிறையச்செய்திருந்தார். ரஹ்மான் போட்ட பேட்டை ராப், இப்ப கெளதம் மேனன் படத்துக்குன்னு காவடிச்சிந்தில்,அருணகிரி நாதரை திரும்பக்கொணர்ந்தார்.
 
இந்த 'ஸ்ட்ரெஸ்ஸ்ட் அவுட்' பாடலில் இந்த வரிகள் வரும்போது பாருங்க அந்தத்தாளம் தான். அள்ளிக்கொண்டு போகும். பின்னர் தொடரும் அந்த குட்டைக்குரல் மவனே இது ராப்பைத்தவிர வேறேதும் இல்லடேன்னு பறைசாற்றும். கிராமிக்கூட நாமினேஷன் ஆனது இந்தப்பாடல்.

Wish we could turn back time, to the good ol’ days,
When our momma sang us to sleep but now we’re stressed out.

இந்த வரிகளில் வரும் தாளம் , நம்ம படத்துல ஒரு பாட்டு இருக்கு, ‘மஞ்சள் பூசும் வானம் தொட்டுப் பார்த்தேன்'னு ராசைய்யா இசைத்த 'ப்ரென்ட்ஸ்' படத்தில் வரும் பாடல். இந்த மெல்லுடலி பாடலை யாராவது ராப்'புன்னு சொல்ல முடியுமா?..ஹ்ம். அதான். அதான் சொல்றேன் தெரியாம மாத்திரை கொடுக்கணும், என்ன உள்ள போகுதுன்னே தெரியக்கூடாது. உடனே ராசைய்யாவைப் பாத்து இந்தப்பயலுஹ காப்பி அடிச்சிட்டானுஹன்னு சொல்லப்பிடாது. இது ராப் பீட் . அதையே எடுத்து ஒரு நல்ல மெலடிக்கும் கூடப்பயன்படுத்த இயலும்னு காமிச்சது அப்டீன்னு வெச்சுக்கலாம். துள்ளலிசைதான் , செருப்பிடாத அம்மணக் கால்களுடன் எரிந்து இன்னமும் அடங்காத சிறிய சிகரெட் துண்டை தவறாக மிதித்துவிட்டாற்போல ஒரு துள்ளலை ஏற்படுத்தும் பாடல் மற்றும் பீட் ;)

ஜப்பான்காரன் தயாரித்த அத்தனை சிந்த்'திலும் இந்த பீட் டீஃபால்ட்டாக கிடைப்பது தான். இதைப்பின்னணியில் இசைக்க விட்டுப்பாடிக் கொண்டிருக்கலாம். ஒன்றும் பிரமாதமில்லை. எங்க எதைப்பயன்படுத்த வேணும் என்பதில் இருக்கிறது இசை. அட! ஆமால்ல. :) 




.

4 comments:

  1. எங்க எதைப்பயன்படுத்த வேணும் என்பதில் இருக்கிறது இசை. அட! ஆமால்ல. : soooooper, yes, Music is the fundamental for all the stress relieving factors.

    Wish we could turn back time, to the good ol’ days,
    When our momma sang us to sleep but now we’re stressed out. I wish I could go back and rewind few things.

    ReplyDelete