Tuesday, September 23, 2014

ஐ என்றால் அழகு




ரஹ்மானின் ஆல்பங்களெல்லாம் எப்போதும் உலகம் முழுக்க கவனிக்கப்படுவதால் அதற்கான அழுத்தங்கள் அவரிடம் எப்போதுமே இருக்கத்தான் செய்கிறது. இது தமிழுக்கில்லை, கேட்கவியலாது. நடித்த ஏமி ஜாக்ஸனுக்கும், கலந்து கொண்ட ஆர்னால்டுக்கும் இசைத்தது என்றெல்லாம் இப்போது தான் கண்டுபிடித்தது போல அனைவரின் கருத்தும் நிலவுகிறது. அவர் எப்பவோ தமிழை விட்டு நீங்கிச்சென்று கனகாலமாகிவிட்டது. இன்னமும் நிதி சால சுகமா’, ‘சடே புத்திமான்எல்லாம் அவரிடமிருந்து எதிர்பார்க்கவியலாது. அதனால என்ன இசைக்கிறாரோ அதை அப்படியே கேட்டுவிட்டு செல்வது தான் சாலச்சிறந்தது. கொஞ்சம் முன்னால வந்த காவியத்தலைவனைப்பற்றி பேச ஏதுமில்லாமல் போய்விட்டது. அது நமக்காக இசைத்தது தான் என்ன பலன்.. ஒண்ணுமில்லை :) அதை மறக்கடிக்கும் படியாக இப்போது இந்த ’. இரண்டு பாடல்களை என்னால் மனந்திறந்து பாராட்ட முடிகிறது. முழு ஆல்பமும் கேட்டு மகிழ்ந்த காலங்களெல்லாம் மலையேறிப்போச்சு :) மற்ற பாடல்களெல்லாம் வழமை போன்ற அல்லது ஏற்கனவே கேட்ட அவரின் பாடல்களின் சாயல்களில்.

மனதைத்தொடும் பாடல்கள் இல்லை அப்டீல்லாம் பேசணும்ங்கற அவசியமுமில்லை இப்போல்லாம். ஏன்னா அவரின் ரசிகர்கள் கடல் கடந்து,எல்லைகள் கடந்து வசிப்பதால் யாருக்கோ ஒருவருக்கு தமிழ் மண் சேராதவர்க்கு அது ரசிக்கத்தகுந்ததாயிருக்கக்கூடும். நமக்கான வட்டத்துக்குள் இருந்து கொண்டு சிந்திப்பதால் வரும் பிரச்னை இது :)  அவரின் ரீச்,மார்க்கெட் எல்லாமே அங்கே.இங்க கொண்டுவந்து அவரை சிறுமைப்படுத்தும் முயற்சி இது :) . இசைக்கும்  அத்தனை  பாடலுக்கும் அந்த மையக்கருத்தை ஜஸ்ட்டிஃபை  செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயமுமில்லை. இந்த அளவிலே இந்த ஆல்பத்தை கேட்டு ரசிக்கலாம்.




ஐல ஐல ஐ

பியானோவின் தாளக்கட்டுடன் தொடங்கும் அந்த ‘ஐல ஐல’ ஒரு மௌலின் ரூஜ் எஃபெக்ட். beautifully programed song. எத்தனை பேருக்குப்பிடிக்கும் எனத்தெரியவில்லை. பாடகி ‘நடாலி டி லூச்சியோ’ லூசியானோ பவரொட்டி (ஒரு ஆப்ரா(Opera) சிங்கர் ஐரோப்பாவில்) கூடவெல்லாம் பாடியவர். கொஞ்சம் விக்கி சேர்ச் தேடியதின் விளைவு. அந்த வெஸ்ட்டர்ன் எஃபெக்ட். கொஞ்சமும் அசராத மேல்ஸ்தாயியிலும் பிசிரடிக்காத குரல். இந்தப்பாடலோடு ஒப்பிட்டு சொல்வதற்கென நம்ம தேவா (தேவா’வேதான்) ட்ரை செய்த அந்த அஜித்’ முகவரி படத்தில் ‘ஏ நிலவே’ என வரும் பாடலைச்சொல்லலாம். அப்புறம் நம்ம யுவன்’ மங்காத்தாவில் முயற்சி செய்த ‘விளையாடு மங்காத்தா’ இருக்கும் அத்தனை ஜானர்களையும் ஓரே பாட்டில் கொண்டுவரும் முயற்சியாக. இதில் தொடங்குவது தாளக்கட்டுடன் கூடிய பியானோவின் இதயத்தில் மணிகொண்டு அடிக்கிறது. ஆதித்யா ராவும் சேர்ந்து பாடியிருக்கிறார். கடைசியில் முடிக்கும்போது தளுதளுக்கும் அவரின் குரல் அதே ஆதண்ட்டிக் ஆப்ரா. (authentic opera )

சாதாரணமாக ப்ரோக்ராம் செய்து உருவான பாடல் இல்லை இது. எல்லாவற்றையும் முதலிலேயே முடிவு செய்துவிட்டு ஒவ்வொன்றாக எக்ஸிக்யூட் செய்த பாடல். எக்ஸ்ப்பர்டீஸ் பற்றி சொல்லவே வேண்டியதில்லை அவருக்கு. பாடகர்கள் பாடி முடித்து சென்றபின் எந்த வெர்ஷன் வெளிவரும் என்றே தெரியாமலேயே வைத்திருப்பார் ரஹ்மான். இதிலும் அது போலவே தான் நடந்திருக்கும். வெறுமனே ஆயிலா ஆயிலா இல்லை Compelling Verse( pallavi) .மண்டைக்குள் ஓடிக்கொண்டேயிருக்கிறது. மனதைத் தொடுவதெல்லாம் இந்தப்பாடலுக்கு மையக்கருத்தில்லை. இசைக்கும் அத்தனை பாடலுக்கும் அந்த மையக்கருத்தை ஜஸ்ட்டிஃபை செய்தேயாகவேண்டும் என்ற கட்டாயமுமில்லை. 3:14ல் பஞ்சாப் பாங்க்ரா , மௌலின் ரூஜுடன் ஒரு ஜுகல் பந்தி ஆகும் தருணம் மெஸ்மரைஸிங். ஒரு நாட்டிய நாடகத்துக்கு உரித்தான அத்தனை அம்சங்களும் இந்தப்பாடலில் ஒருங்கே அமைந்திருக்கிறது. அவங்கல்லாம் (ஐரோப்பாவில்) இன்னும் ஆப்ரா (நாட்டிய நாடகங்கள்) கேட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள். நமக்குதான் சிலம்பு மறந்து விட்டது. எனக்கு இந்த மாதிரியான ஆப்ராக்களில் கொஞ்சம் க்ரேஸ் உண்டு.இதுவரை தமிழில் யாரும் செய்யவில்லை.

1:02 ல் தொடங்கி 1:24 வரை கேட்டு மகிழலாம் அந்த ஆப்ராவின் எஃபெக்ட்டை .1:40ல் தொடங்கி 2:06 வரை வழக்கமான ரஹ்மானியா J நாம் இத்தனை காலமும் கேட்டு மகிழ்ந்த அந்த ரஹ்மானியா எஃபெக்ட். 3:14 தொடங்கி 3:27 வரை பஞ்சாப் பாங்க்ரா எஃபெக்ட். பின்னர் பின் தொடரும் அந்த ஆப்ராக்குரல் ஒரு ஜுகல் பந்தி எஃபெக்ட். ஒக்காந்து யோசிச்சிருக்கான்டா இவன்.

எல்லாவற்றையும் (ஜானர்களை) ஒரே பாட்டில் கொண்டுவரலாம் தான். ஓழுங்காக ஸிங்க் ஆகவில்லையானால் அபஸ்வரமாகிப்போகும். இத்தனை ஆண்டுகள் அனுபவம் கைகொடுத்திருக்கிறது. நினைக்கும் பாடல் கிடைக்கும்வரை ஷங்கர் அழவைப்பார் என ரஹ்மான் அவரின் அம்மாவிடம் சொன்னதாக ஒரு செய்தி இருக்கிறது. இந்தப்பாடலைக்கொண்டுவர எத்தனை முறை அழுதார். வெல்டன் ரஹ்மான்.

00:39ல் பின்னர் 1:12 ல் தொடங்கி 1:24 வரை வரும், பின்னரும் ஹார்மனியாக பாடல் முழுதும் தொடரும் அந்த யோடலிங் ( Yodelling )  தமிழில் நம்ம ஆண்ட்ரியாவிற்கும், என்னெஸ்கே ரம்யாவிற்கும்,மட்டுமே வாய்ப்பது. இன்னும் ஆதெண்டிக்காக இருப்பதற்காக, இயல்பில் வெளிநாட்டுக்காரராக இருப்பவரைப் பாடவைத்து இன்னமும் ஜஸ்டிஃபை செய்திருக்கிறார் ரஹ்மான். மொழி உச்சரிப்பு,பாடல் அமைந்திருக்கும் முறை ( ஜானர்) இவற்றையெல்லாம் நம்ம தமிழுக்குகந்ததல்ல என்ற கூற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு கேட்கவேண்டும் இந்தப்பாடலை. அப்போது ரசிக்கலாம். இந்தப்பாடலால் உச்சத்தை தொட்டுவிட்டார் என்றெல்லாம் ஜல்லியடிக்க விரும்பவில்லை.இந்த ஜானருக்கு தேவையான,உரித்தான அத்தனை அம்சங்களையும் வைத்து பின்னரும் வடநாட்டு பாங்க்ராவையும் இன்னபிற தமக்கேயுரித்தானவற்றை கொஞ்சமே கலந்து , வெஸ்ட்டர்ன் பாணியில் கொடுத்திருக்கும் பாடல் இது. பின்னோக்கி சென்றால் ஆங்கிலப்படங்களில் பாடல்களும் இடம்பெற்றிருந்த காலங்களில் இது போன்ற பாடல்களை கேட்கநேரலாம். ’மின்சாரக்கனவு’ படத்தில் வரும் ஸ்ட்ராபெர்ரி கண்ணே’ பாடலில் சிறிதே முயற்சி செய்ததை இங்கே விரிவு படுத்தியிருக்கிறார்.





லேடியோ

இந்த லேடியோ’வப்பாடின குயில் நிகிதா காந்தி; பத்தி ஒரு விக்கி கூட இல்லையே. ஒரு வெஷ்யமும் பிரியமாட்டேங்குதே. ஆனாலும் மண்டைக்குள்ள ப்ரோக்ராம் ஆகி ரணகளமா ஓடுது. என்னே ஒரு அம்ணி ஒரு விக்கி ஃபேஸ்புக் எங்கயாவது இருக்கணும்ல ?! ட்விட்டர்ல ஒரு பக்கம். அதலயும் அவ்ளவ் ஒண்ணும் பிரமாதமான விஷய்ங்களேயில்லை ...என்னா புள்ள போ J உச்சரிப்பெல்லாம் தூக்கிக்குப்பைல போட்டுவிட்டு கேட்டேயாகவேணும் என்று திமிர்த்தனமாக என் மண்டைக்குள் சுற்றிக்கொண்டேயிருக்கும் நிகிதாவின் குரல்.

மரியா கரே மாதிரி ஒரு குரல். பில்போர்ட் யுஸ் டாப் 20 கவுண்டவுனில் முதலிடம் பிடிக்கும் பாடல் போல என்னே ஒரு பாடல் இது. ஒரிஜினல் சாங்டா மச்சி. 'கசடதபற' 'ஞஙநணமன' வல்லினம் மெல்லினம் ஆச்சு ,, எங்க இடையினம்..ஆகா நம்ம 'ஏமி'ப்புள்ளக்கி இடை எண்டால் தேடியல்லோ பாக்கோணும் அதான் , மதன் கார்க்கி அதப்பத்தி எழுத இயலாமல் கொஞ்சமே குழம்பிப்போய் 'ரப்ப்ட்டதப்பட்டா'ன்னு எழுதீட்டார். ஆஹா...ஸெக்ஸி லேடியோ லைக்ஸ் கோடியோ 32 32 32 ஸூப்பர்ப் ஹை பிச் , அதிலும் பிசிராத குரல்.. அப்டியே..ஹிஹி..வேணாம் வேணாம்..ஹிஹி.... 'லேடியோ லேடியோ' வரும்போதெல்லாம் நிற்கும் இடத்திலிருந்துகொண்டு ஒரு கையை மட்டும் உயரத்தூக்கி ரெண்டு கால்களையும் குதித்து குதித்து ஆடவேண்டும் போலிருக்கிறது.

//
பனிக்கூழ் இவள் பார்வையோ
குழம்பி வாசம் இவள் கூந்தலோ
வளையல் அணியும் ஒரு வானவில்
புடவை சூடும் ஒரு பிறை நிலவு

பல்லுக்குள்ளே மெல்லும் கோந்தாய்
ஒட்டிக்கொள்கின்றாள்
நுண்ணலை பாயும் அடுப்பொன்றில்
நெஞ்சை வாட்டிச்செல்கின்றாள் //

ஹ்ம்,. மதன் கார்க்கியும் இத்தனை கட்டுப்பாடுகளுக்குள்ளும்/தடைகளுக்குள்ளும் கொஞ்சம் தமிழ் படைத்திருக்கிறார். மெட்டுக்குப்பிறகே வரிகள் எழுதியிருக்கவேணும்!




மெர்சலாயிட்டேன்

தம்பி அநிருத் மற்றும் நீதி மோகன் ( லூஸ் மோகன் இல்லை :) பாடிய ஒரு வழக்கமான பாடல். நிறைய யோசிக்கவெல்லாம் இல்லை. வாத்தியக்கருவிகளெல்லாம் ‘பேஞ்சோ பார்ட்டி’ ரேஞ்ச்ல வெச்சுக்கிட்டே போட்டுத்தள்ளீட்டார் ரஹ்மான். பாம்பேல இந்த பேஞ்சோ பார்ட்டீகள் ரொம்ப பிரபலம். ஒரு ஸிந்த், ஒரு ட்ரம், மற்றும் ஒரு புல்புல் தாரா மட்டுமே வெச்சுக்கிட்டு எந்தப்பாட்டையும் அவங்களுத்தகுந்த மாதிரி பாடி முடிச்சுருவாங்க. கேக்றவங்களுக்கும் இந்தப்பாட்டத்தான் பாட்றான்னு புரிந்தும் விடும். அதான வேணும் :) 3:10ல வர்ற இண்டர்லூடெல்லாம் ரஹ்மானான்னு கேக்கவெக்கிறது!. ஒரு வேளை கொஞ்சம் யூத்தா இருக்கட்டும்னு அமெச்சூரா பண்ணினா மாதிரி இருக்கு. வலுவானவனை எதுவுமே தெரியாத மாதிரி பாவ்லா காட்டச்சொன்னா மாதிரி இந்தப்பாட்டு.  இதுக்கு ஒரு மீளுருவாக்கமும் கூடவே இருக்கு ஆல்பத்துல.! அவ்வளவா வித்தியாசம்னு ஒண்ணும் இல்லை.! தாளக்கட்டு இன்னும் வேகமா இருக்கு அதான்.  ஏற்கனவே வந்த பிரபலமான பாடல்களை பிறர் ரீமிக்ஸ் செய்வது வழக்கம். அதற்கும் வாய்ப்பு கொடுக்காமல் இப்ப ஒரிஜினல் இசையமைப்பாளர்களே ரீமிக்ஸ் அடிச்சு B Side’ ல போட்டு விட்டுவிடுகிறார்கள்.

மெட்ராஸ் பாஷை இப்போ அகராதியிலும் இடம்பிடிக்கிறது. முன்னல்லாம் தான் என்ன சொல்றாங்கன்னு தெரியாம இருந்த்து. மெட்ராஸில வசிக்காதவங்களுக்கும் இப்பல்லாம் புரிய ஆரம்பித்திருப்பது இது மாதிரியான பாடல்களால் தான்.

முன்னாடி யுவனப்பாடவெச்சார் தம் இசையில். இப்ப தம்பி அநிருத்தை. இதில வழக்கமான அநிருத்தின் குரலை எதிர்ப்பார்த்து ஏமாந்தேன். அதோட பாடல் தொடங்கும்போது சிரிக்கவும் செய்கிறார். ரொம்ப செயற்கையாக இருக்கு!  சிரிப்பெல்லாம் எஸ்பீபிக்கு மட்டுமே வாய்ப்பது தம்பி :)


என்னோடு நீ இருந்தால்

இந்தப்பாடல் நிறைய ப்ரையன் ஆடம்ஸை நினைவுபடுத்துகிறது எனக்கு. Have You Ever Loved a Woman, Cloud 9, அப்புறம் படத்தில் வரும் அந்தப்பாடல் என ஒரு மிக்ஸ். மைல்ட் ராக்’கில் இசைத்த பாடல் இது. எப்பவுமான ரஹ்மான் ஸ்டைல். ‘எழுதி வாசிப்பது கட்டுரை’ என்ற பாணியில் ஒரு சுரத்தில்லாமல் நான் பாட்டுக்கு வாசிக்கிறேன் நீ பாட்டுக்கு உன் உரைநடையை வாசிங்கற பாணியில் போட்ட பாடல். வரிகள் கொஞ்சம் கேக்றா மாதிரி இருக்கு. ‘மன்னிப்பாயா’ பாடலும் வேற இடையிடையே வந்துவிடுவதும் ஒரு பெரிய குறை.

இதே பாடலின் Reprise Version  எனக்குப்பிடித்திருக்கிறது. சின்மயி குரலில் தொடங்கும் பாடல். இவர் அப்போ அடிச்ச ட்வீட்டையெல்லாம் கூட மறக்க வைக்கிறது குரல்.


பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

ஹரிச்சரண் இப்போதெல்லாம் ரஹ்மானுக்கு பெட்’ஆயிட்டார். நிறையப்பாட்றார் அவரின் இசையில். இது டிப்பிக்கல் ரஹ்மான் பாடல். ஜீன்ஸில் வந்த ‘அதிசயம் அதிசயம்’ பாடலின் சாயலில் இந்தப்பாட்டு.
2:59 லருந்து கேட்டுப்பாருங்க. புரியும். அதனால புதுசா ஒண்ணும் இல்லை இந்தப்பாடலில். இடையிடையில் அந்த மழைத்துளி விழுவது இதெல்லாம் வெச்சு கொஞ்சம் புதுசாக்க முயன்ற பாட்டு. இருந்தாலும் அடியில் undercurrent ஆக ஜீன்ஸ் ஓடிக்கொண்டிருப்பது ஏற்கனவே கேட்டுப்பழகிய பாடல் போல் ஒரு சுரத்தின்றி இசைக்கிறது.



.